தன்மையில்லா மனம்
வெட்கம் இல்லை வெளிவேஷம் இல்லை.
நடைமுறையில் நடக்காத காரியம் இன்னிலை.
மார்க்கத்துடன் மனம் ஒன்றுசேர்வதனால்
உள்ள, இல்லாப் பொருள்கள்
உயிர்பெற்று தலைதரித்து ஆடுகின்றன.
பயண, பாதை இரண்டும் நாம் வகுத்தனவை.
நமது அகத்தினால் உருவாக்கப்பட்ட
ஜாலம் நிறைந்த தன்மையற்ற
காற்றுக் கட்டிடங்கள்.
செய்வதற்கோர் தொழிலை நாடி
சிந்தனைக்கு கவிதை கோரி
வேதனக்கு விதிக்கும் பல
ழூதனக் கருவிகள் சமைத்து
நிழல்போன்ற அக்கருவிகளை நிஜமாக நம்பி
அவற்றுள் ஒன்று கலந்து மகிழ்ந்து வருந்தி
நடத்தும் பித்தலாட்டத்தை விடுவது-
கட்டிய கயிலியை உதரித் தள்ளி
விட்ட மேனிக்கு வியப்பொன்றும் இல்லாது
அப்படியே பிறந்த அந்த அலங்கோலத்துக்கு
சமம் நிர்வாணம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment