Friday, June 29, 2007

மனத்தொழில் நமது

மனத்தொழில் கடினம்,
கால்மணி நேரத்தில் ஒரு சிறிய ஓசையை
ஒலிக்குமாறு கேட்டதற்கு
கிடைத்ததென்னவோ சம்மந்தமில்லாத
சிலுசிலுப்பு.

நடப்பது என்னவென்று கவணித்தால்
எண்ண வெள்ளத்தில் ஒன்று கலந்தது.
ஒன்றும் நடக்கவில்லை என்பது
ஏமாற்றோ என்னவோ.
ஆகமொத்தம் கைவசம் இருக்கும்
காரியம் கடிணம்!

கண்ணை மூடியதும் காட்சிகள் ஏராளம்.
காதைப் பொத்தின் கலகலப்பு, கோஷமயம்.
இல்லாத புலங்களில் தொல்லை இல்லாத கணமில்லை.

செய்வதெண்று எடுத்துக் கொண்டால்
சிய்து முடிக்கவேண்டும்
கடனோ பலனோ, இத்தொழில் நமதாயிற்று.

No comments: