Friday, June 29, 2007

சுதந்திர தாகம்

சுதந்திரம்- இந்த வார்த்தைக்குத் தான்
பொருள் ஏராளம்.
தேசங்கள் அடிமைப்பட்டன, பிறகு
விடுதலை பெற்றன.
நிரம், குணம், பிறந்த குலம் என்றென்று
காரணங்களைக் குவித்து
கருத்தினை நிராகரித்து
கோடானு கோடி மக்கள் ஒருத்தரை யொருவர்
அடிமைப் படுத்தி அல்லல் கொடுத்து
அராஜகம் புறிந்தது ஒரு பக்கம்.

மறுபக்கமோ மனதின் கடிவாளங்கள்.
இதுதான் இன்பம் இதுதான் வாழ்க்கை
என்றென்று கர்ப்பனைகளில்
தன்னைத் தானே பூட்டிவிட்டு,
நடந்து முடிந்த சம்பவங்களின் தன்மையின்மையை
சட்டமாக சமைத்து விதிகளை வகுத்து,
நிகழாத எதிர்பார்ப்புகளை யாகத்தில்
நெய்யாம் ஆசைகளினால் மூட்டி
சுதந்திரம் என்னும் சுலபமான சுயநிலையினை
சுட்டுப் பொசுக்கி சூத்திரத்தில் தன்னைத்தானே
ஆட்டிவைக்கும் அடிமைத்தனம்- என்று தணியும்?

No comments: