Friday, June 29, 2007

எண்ணக் கீற்றுக்கள்

பயம், ஆசை எதிர்ப்பார்ப்பு-
எல்லாம் ஒரே குட்டையில் உருவான
தன்மையில்லா பொருள்கள்.

நிகழ்ச்சிகளுக்கு தன்மை அளிக்கக் கூடிய
சக்தி பொருந்தியன எண்ணக் கீற்றுக்கள்.
ஒன்றின்பின் ஒன்று தொத்திக் கொண்டு
மனம் என்ற ஆழ்கடலில்
நினைவு என்ற நிலையிலா நீரோட்டைத்த்ினை
குணம் என்னும் அலைகளினால்
சாந்தி என்னும் கடலோரத்தில்
மீண்டும் மீண்டும் எழுப்பி அடித்து
சிதைத்து உறு மாற்றுவன.

No comments: