Friday, June 29, 2007

தாள் ஒன்று

தியானப் புத்தகத்தில் தாள் ஒன்று
ஒருநாள் இதில் உள்ள எழுத்துக்கள்
காகிதத்தின் வெள்ளை ஏட்டோடு கலந்து
அர்த்தம், அனர்த்தம் போன்ற பிறிவுகளை மீறிடின்
வியப்பதற்கு ஒன்றும் இல்லை.

சகல ஜீவ ராசிகளுக்கும் ஒரு நொடியேனும்
சாந்தம் அளித்து சலனம் போக்க
செய்வதிந்த தியானம்.

பேதங்களை மீறி விவாதங்களை முற்றி
நிகழ்ந்தன நடப்பன எதிர்ப்பன என்ற
மூன்று காலங்களையும் உயிர்மூச்சில் உணர்ந்து
லோகம் இன்புறுவத்ற்கு இந்த தியானம்.

வேறு ஏதேனும் காரணத்தைக்கொண்டு
திசைமாரின் தாள் ஒன்றுக்கு திருப்பும்! இதுவே
இந்த தியானப்புத்தகத்தின் தாள் பல
அவற்றில் இந்தத் தாள் ஒன்று.

No comments: