இருக்கும் நிம்மதியை விட்டுவிட்டு
இல்லாததை தேடுகிறேன்.
இதன்பேர்தான் வேட்டை.
குழப்பம் இல்லத நிலை அடையுமின்
உயிர் உடலில் தங்குவதில்லை- ஆக
வேட்டையின் விளைவு இதுவா
இல்லை வீஇண் பலியா? என்ற கேள்விக்கு பதில்
வேடனைக் கேட்டால் ஒன்று; விலங்கினை கேட்டால்?
கண்கட்டி வாய்போத்தி செவிகளை உள்செலுத்துமின்
நினைவில் வரும் தங்கமான்
நான் என்னும் சுயநினைவில் விளையும்
நல்லதொறு விந்தைப் பொருள்.
உயிரைக் கொல்வதனால் வேடனும்
தன்னுயிரின் ஓர் பங்கினை இழக்கின்றான்.
உயிரில்லா இயற்பொருளுக்கு
உணர்வளிக்கும் வல்ல மன விலங்கின்
கற்பனையாம் தங்க முட்டைகளை
இழக்க மறுக்கின்றேன்; இந்த மறுப்பே
மனிதயியல்பு போலும்.
நான் இறைவனோடு இணைய விரும்பவில்லை
இப்படிக்கு்,
வேடன், விலங்கு, வேட்டை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment