Friday, June 29, 2007

கலங்கும் மனம்

கண்மூடின் - நூறு லோகங்கள்
சகித்துக் கொண்டேந் ஏனெனின் இவை
தடுமாறும் என் சித்தத்தின் சிதரல்கள்.
ஓர்மனது என்னும் விந்தை லோகத்தின்
சிற்றரசாங்கங்கள்- சேர்ந்திருக்க
தவிக்கும் பெருங்காவியத்தின் சுவடுகள்.

கண்விழித்தேன் - கோடானுகோடி லோகங்கள்.
காண்போர் சிரிஷ்டித்தனவை இவை
கலைப் பொருள்கள், கருவிகள்
ஏதும் தனித்து நிற்கும் இயல்பின்றி,
ஒன்றி சமரசம் காணவும் வழியின்றி
தவித்து இயங்கின.

ஆக பல்லாயிறங்கோடி லோகங்களை
ஆக்கி அழித்து மீட்டி இழந்த
நான் என்னும் ஓர் கருத்தா
தன்னைத் தானே உயர்த்தித் தாழ்த்தி
தன் படைப்புகளோடு ஒன்றிப் பிறிந்து
கடைசியில் உருவின்றி காற்றோடு காற்றாக ...
சொல்ல வந்த அந்த ஒரு சொல்லைச்
சொல்வதற்குமுன் கலந்திற்று.

No comments: