உண்மை பொய்மையிடம் கேட்டது-
பொய்மையான நீ இருப்பது
எப்படி உண்மையாக முடியும்?
அப்படி இருந்தால் உனக்கும் எனக்கும்
வித்தியாசம் ஒன்றும் இல்லாமல் போய்விடுமே? என்று.
பொய்மை சொன்னது-
உண்மையான நீ இருப்பதால் தானே
பொய்மையான நான் உரு கொண்டேன்
ஆகவே நீயே எனது கருத்தா.
பொய்மையான நான் இருப்பது உண்மை,
ஆகவே நான் உனது பிம்பம்
ஆனால் நீயும் எனது பிம்பம்!
உண்மை இதை கேட்டு
எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றது.
பொய்மை அதற்கு கூறியது-
புறிந்துவிட்டால் நாம் இருவரும் மறைவோம்.
மிஞ்சுவது நிலையிலாத சித்தச் சுயம்.
No comments:
Post a Comment