தகழி ஒன்று கிடைத்து
தங்கு எண்ணெய்விட்டு வைத்தேன்
திறை தாண்டி காண்போமென
திட்டமிட்டு திரி சமைத்தேன்
பார்வையில் சிக்கி முக்கும்
பலப்பல காட்சிகள்
பரிசித்துப் பார்ப்பதற்கு
படியுமென விளக்கெறித்தேன்
தீயினை ஏற்றியதும்
தெரிந்தது கோடிரூபம்
தேர்ந்தெடுக்க வல்லேன்
திருக்குறளைக் கேட்டேன்
அகத்தின் ஆழத்தையும்
புரத்தின் பொலிவினையும்
முதல் இடை கடை என்று
மூதறிஞர் வகுத்து வைத்தார்
குரள்தனை புரட்டினேன்
கூர்மைநிறை ஞானம் சேர்
அரம்பொருள் இன்பமென
ஆயிரம் பாடல் கேட்டேன்
நல்லதொரு வெண் பாவில்
நவின்றன பலமொழிகள்
தேர்ந்தெடுக்கத் திட்டமில்லாது்
திகைத்துப் போய் நின்றேன்
தெளிந்தன ஐய்யம் பல
தெளியாத புதிராய் சில
பன்மையில் ஒருமை கண்டு
பைய பற்று உற்றேன்.
உள்ளு வெளி யுலகு சேர்ந்து
உறு திரியும் இவ்வுலகில்
திருக்குறளும் தெளிதீபமும்
தேர்ந்தமனமும் வேண்டுவனே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment