Saturday, July 7, 2007

காபியும் தியானமும்

கோப்பையில் அடங்கிய காப்பியே
குன்றா அமுதமே!
தலக்கத் தலைக்க உன்னை என்முன் வைத்து
கண்மூடின் கற்பனைகள்
கபகபவென பொங்குவதேன்?

கசப்பும் தித்திப்பும் கலந்த என்
கருமணியே! கன்டாங்கிச் சேலைபோல
உன்மேல் படியும் ஆடையும் ஓர் தனி ருசி.

ஆசையைத்தூண்டும் நீ
எனக்குப் புகட்டிய பாடங்கள் பல.
வாசனை பரப்பும் உன் அணுப்பொருள்கட்கு
உயிர் கொடுத்து, உண்ணுவோமா என
பறக்கும் என் மனம்-
அதைத் துறந்தும் இருப்போம் என
மாறி மாறி சிந்திக்கிறது

ஆகமொத்தம் என் தியானத்தை
கலைக்க வல்ல நீ
அதை ஆக்கவும் வல்லமை கொண்ட
திடமேவும் ஆனந்த தாகம்;
தியானப் பிரயாணத்தில் என்னுடன்
கைசேர்ந்து நடக்கும் ச்னேகம்.

No comments: